--- --:--:-- --

தரமற்ற சானிடைசர் விற்றால் கடும் நடவடிக்கை..!

9

ரமற்ற கலப்படம் மற்றும் போலி விற்பனை செய்ததாக 82 நிறுவனங்களிடம் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழகத்தில் மருந்து கடைகளில் விற்கப்படும் சான்றிதழ்கள் தரமானதாக உள்ளதா என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் கண்காணித்து வருகிறது.

 

அதில் 48 நிறுவனங்கள் தரமற்ற சானிடைசர் விற்பதாகவும், 32 நிறுவனங்கள் கலப்படம் செய்து சானிடைசர் விற்பதாகவும், இரண்டு நிறுவனங்கள் போலி சானிடைசரை விற்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி அந்த 82 நிறுவனங்களிடம் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 

இவற்றில் 32 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்பட உள்ளது. கலப்பட சானிடைசர் விற்பனை நிரூபணமானால் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்ட விதிகளின்படி 20 ஆயிரம் ரூபாய் முதல் அபராதமும், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்

Leave a Reply

Right Menu Icon