--- --:--:-- --

என் பரம்பரையிலேயே நான் தான் முதலில் கார் வாங்கியுள்ளேன்- ஜி.பி. முத்து

8

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி பி முத்து யார் என்று கேட்டால் சின்னக் குழந்தைகள் கூட கூறும் என்று சொல்லுமளவிற்கு டிக் டாக் மூலம் பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள முத்துவிற்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

 

பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்தார். தொடக்கத்தில் பொழுதுபோக்கிற்காக டிக்டாக்வீடியோ வெளியிட்டு வந்த ஜிபி முத்து ஒரு கட்டத்தில் டிக் டாக்கே கதி என்று கிடந்துள்ளார்.

 

வெற்றிக்கொடி நாட்டி வந்த ஜி பி முத்துவிற்கு டிக் டாக்கிற்கு தடை என்ற செய்தியும் பேரிடியாக விழுந்துள்ளது. ஆனால் தளர்ந்து விடாமல் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் களமிறங்கியுள்ளார்.

 

இதனுடைய ஜி பி முத்து செகண்ட் ஹேண்ட் கார் ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் தன் பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் தான் தான் என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon