கிருமிநாசினி சுரங்கத்தை நிறுத்துங்க.. இது மக்களை திசை திருப்பும் வழி!
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்து பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கிருமிநாசினி தெளிப்பு பாதைகள் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளதோடு நோய்த் தொற்றைத் தடுக்கும் கைகழுவும் பழக்கத்தில் இருந்து மக்களை திசை திருப்பக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வேதி பொருட்களின் கலவையை மக்கள் மீது தெளிப்பது என்பது ஆபத்தான தோடு மட்டுமின்றி பயனற்றது என்றும் தெரிவித்துள்ளார். எனவே கிருமி நாசினி தெளித்து பாதைகளை அமைக்க வேண்டாம், அதை பயன்படுத்தவும் வேண்டாமென்று தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி அறிவுறுத்தியுள்ளார்.






