--- --:--:-- --

உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி மளிகை கடையில் பணம் திருட்டு..!

6

ரூர் மாவட்டத்தை உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி மளிகை கடைக்காரரின் கவனத்தை திசை திருப்பி ரூ.52,000 பணத்தை திருடி சென்ற நவீன் குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் தேதி பொன்னுசாமி என்பவரின் மளிகை கடைக்குள் சென்ற நவீன் குமார் கடையில் மாத்திரைகளை விற்கக்கூடாது எனக்கூறி குப்பை தொட்டியில் வீசுமாறு கூறியுள்ளார்.

 

பொன்னுசாமி மாத்திரைகளை குப்பையில் வீசிவிட்டு வந்ததும் இனி இது போல் செய்யக்கூடாது எனக் கூறியவாறு நவீன் பைக்கில் ஏறிச் சென்றுள்ளார்.

 

அவர் சென்ற பிறகுதான் கல்லாப்பெட்டியில் 52,000 பணத்துடன் இருந்த பை மாயமானது தெரியவந்துள்ளது. சாலையில் வாகன தணிக்கையில் போலீசாரிடம் சிக்கிய குமாரிடம் விசாரணை நடைபெறுகிறது.

 

Right Menu Icon