ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளது – கே.என்.நேரு
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளதாக மானிய கோரிக்கை விடுதலையின் போது அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மானிய கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர் கே என் நேரு முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்தும் முன்னோடி திட்டங்களாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல் ரஷ்யா உட்பட பல சர்வதேச நாடுகளில் உள்ள பத்திரிகைகள் கூட அவருடைய திட்டங்களை புகழ்ந்து எழுதி உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முதல்வரின் திட்டங்கள் ஒரு மாநிலத்திற்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக இருப்பதால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பிரதமராகும் தகுதி உள்ளதாகவும் அமைச்சர் கே என் நேரு புகழாரம் சூட்டியுள்ளார்.







