--- --:--:-- --

அயோத்தி நகரை முழுமையான சோலார் நகரமாக மாற்ற முடிவு.!

8

ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தி நகரை முழுமையான சோலார் எனப்படும் சூரிய ஒளி சக்தி நகர் ஆக மாற்ற உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது.

 

அதன்படி ராமர் கோயிலில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சமுதாய சமையலறை உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் சூரிய மின்சக்தியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

அத்துடன் தங்களது வீடுகளில் சூரிய மின் தகடுகளை பொருத்த முன் வருபவர்களுக்கு கூடுதல் உதவி அளிக்கவும் தங்களது சூரிய மின்சக்தி வரையில் திருத்தங்களை கொண்டு வரவும் மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon