--- --:--:-- --

தாம்பரம் புதிய மாநகராட்சியாக அறிவிப்பு..!

10

சென்னை அருகே உள்ள தாம்பரம் நகராட்சி மாநகராட்சி ஆகிறது. சென்னை தாம்பரம் அருகே உள்ள பல்லாவரம் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அழகாபுத்தூர், நகராட்சிகள் புதிதாக அமையும் தாம்பரம் மாநகராட்சிகளுடன் இணைக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தாம்பரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாம்பரத்தை மாநகராட்சியாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon