4 மாட வீதியில் வலம் வந்த ஸ்ரீரங்க பெருமாள்!
ஸ்ரீரங்கம் கோயிலில், சித்திரை தேர் திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் 9-ம் நாளான இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீராக வந்த கிளி மாலையை அணிந்தபடி நம்பெருமாள் அதிகாலை 5.15 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு முக்கிய வீதிகளை திருத்தேர் வலம் வந்தது.





