தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் ஓரங்களில் ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் தென்கிழக்கு அரபிக்கடல், வடக்கு அந்தமான் கடல், தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






