தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக மார்ச் 8ல் பிரத்யேக ஆப்..!
தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களை சேர்க்க வரும் எட்டாம் தேதி பிரத்யேக ஆப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 234 பொறுப்பாளர்களைக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் பொறுப்பில் உள்ள நபர்கள் மாற்றுக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கக் கூடாது எனவும் அவ்வாறு இருப்பின் அவர்களது மாற்றுக் கட்சி உறுப்பினர் அட்டை இப்பொழுது மாவட்ட செயலாளரிடம் வழங்கி விட வேண்டும் என்றும் கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.





