--- --:--:-- --

திருவாடானை பிடாரி  அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை..!

12

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி  அம்மன் கோவிலில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள கங்கை அமரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து முன்னதாக திருவாடானை பண்ணவயல் அரசு நடுநிலைப்பள்ளி, சமத்துவபுரம் அரசு துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று கோவில் வளாகத்தில் வைத்து பரிசுகள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை, நோட்டு, போனா வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்விற்கு திருவாடானை ஊட்சி மன்ற தலைவர் இலக்கியா ராமு தலைமை வகித்தார், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி செங்கைராஜன் முன்னிலை வகித்தார், பள்ளி மாணவர்களுக்கு பரிசு மற்றும் சீருடைகளை கோவில் பட்டர் செல்வரெத்தினம், மீனாள் குடும்பத்தினர் வழங்கினர். மேலும் வந்திருந்த அனைவருக்கும அண்ணாதானம் வழங்கப்பட்டது

Right Menu Icon