மகள்களை வைத்து உழவு செய்த விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய சோனு சூட்..!
ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக இரண்டு மகள்களை ஏர் இழுக்க வைத்த விவசாயிகள் பாலிவுட் நடிகர் சோனு சூட் வழங்கி உதவியுள்ளார். சித்தூர் மாவட்டங்களில் வசிக்கும் நாகேஸ்வர ராவ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.
அதில் போதிய வருமானம் கிடைக்காததால் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடிவெடுத்தார். இந்த நிலையில் உழவு பணிக்கு மாடுகள் இல்லாததாலும், டிராக்டர்களுக்கு வாடகை கொடுக்க முடியாததால் தனது இரண்டு மகள்களையும் ஏர் இழுக்க செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத் தளத்தில் வெளியானது. இதனை அறிந்த பாலிவுட் நடிகர் சோனு சூட் விவசாயி குடும்பத்திற்கு டிராக்டர் வழங்குவதாகவும் அந்த சிறுமிகள் இருவரும் கல்வியில் கவனம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதன்படி 24 மணி நேரத்திற்குள் அந்த விவசாயி குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கி நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.







