சூரிய வெப்பத்தை ஊசிமூலம் செலுத்தலாம்… டிரம்ப்பின் வியக்கும் கருத்து!
சூரிய ஒளியைப் பயன்படுத்தி கொரொனாவை ஒழிக்கலாம் என்று ஊசி மூலம் அல்ட்ரா வயலட் வெப்பத்தை உடலில் செலுத்தி கொரொனா ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஊசி மூலம் வெப்பத்தை செலுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ட்ரம்பின் கருத்தை கேட்டு அதிர்ந்து போன மருத்துவர்கள் இது சரியான சிகிச்சை ஆகாது என்றும் அதைவிட காய்ச்சல் நல்லது என்றும் தெரிவித்தனர். காய்ச்சல் உடலில் எதிர்ப்பு சக்தியை காட்டுகிறது என்று மருத்துவர்கள் பதிலளித்த போது தான் கூறியதை ஆராய்ந்து பார்த்தால் தான் என்ன என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அது பற்றி கூறிய கருத்து திரிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.







