அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு
ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
மல்காங்கிரி மாவட்டத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் அந்த பகுதியில் ஏற்கனவே நான்கு செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் மூன்று இடங்களில் 4ஜி செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.






