--- --:--:-- --

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு..!

3

மிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் ஆந்திர முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

 

இந்நிலையில் குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon