--- --:--:-- --

சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

5

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இதனிடையே இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை சிவசங்கர் பாபா மீது மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்கே தமிழரசி வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Right Menu Icon