--- --:--:-- --

ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை ..!

4

மிழகத்தில் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்வது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பனை மரம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டது.

 

பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும். பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் அங்காடிகள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டைதாரர்களை பனைவெல்லம் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon