கொரோனாவால் மரணத்தைத் தடுக்கும் மாத்திரை..!
அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்திருக்கும் மாத்திரை கொரோனா வைரசுக்கு எதிரான சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்துள்ளதால் நிறுவனம் தயாரித்திருக்கும் மாத்திரையை உட்கொண்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய நிலை கூட பலருக்கு ஏற்படாது எனவும் தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது .
இந்த முடிவுகள் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும் இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கொரொனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.







