“பசிக்கு சாப்பிட வரும் ஏழைகளுக்கு ருசியையும் காட்டுங்கள்!!” அம்மா உணவக ஊழியர்களுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் அறிவுரை!!
திருப்பூர் காங்கேயம் நல்லூர் மண்டல அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் அம்மா உணவகத்தில் திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காலை 8 மணியளில் உணவகத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த எம்.எல்.ஏ செல்வராஜிற்கு அம்மா உணவக ஊழியர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ஆய்வைத்துவங்கிய எம்.எல்.ஏ செல்வராஜ் ஊழியருடன் இணைந்து தோசை சுட்டார். பின்னர் உணவு விநியோகித்தார்.
அப்போது அந்த உணவகத்தில் இரண்டு இட்லிகளை வாங்கி சாப்பிட்ட அவர் இட்லி ருசியாக இல்லை. பசியாற்ற வரும் ஏழைகளுக்கு கொஞ்சம் ருசியையும் காட்டுங்கள் என அம்மா உணவக ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட அம்மா உணவகம் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுகளை வழங்கி வருகிறது. இங்கு பசிக்கு சாப்பிட வரும் மக்களை ருசிக்காக சாப்பிடும் அளவிற்கு நல்ல தரமான உணவு வழங்க ஊழியர்களுக்கு அறிவுத்தியுள்ளதாக தெரிவித்தார்.



