--- --:--:-- --

திடீரென மயங்கி விழுந்தவரை வெளியே உள்ள மரத்தடியில் படுக்க வைத்து சிகிச்சை அளித்ததால் அதிர்ச்சி!

3

கன்னியாகுமரியில் உடல்நலம் பாதிக்கப்பட்டவரை கொரோனா அச்சம் காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற அவருக்கு மரத்தடியில் வைத்து சிகிச்சை அளித்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார்.

 

அப்போது திடீரென வயிற்று வலி காரணமாக சாலையில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது கொரொனா அச்சம் காரணமாக அங்கிருந்த மருத்துவ பணியாளர்கள் சுகாதார நிலையத்திற்கு வெளியே உள்ள மரத்தடியில் உள்ள பெஞ்சில் படுக்க வைத்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

 

இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜனிடம் கேட்ட போது வயிற்று வலி காரணமாக வந்தவருக்கு கொரொனா இருக்குமோ என்ற அச்சம் காரணமாக மருத்துவ பணியாளர்கள் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் இனிமேல் இது போல நடந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon