--- --:--:-- --

கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

APTOPIX Italy Virus Outbreak

A patient in a biocontainment unit is carried on a stretcher from an ambulance arrived at the Columbus Covid 2 Hospital in Rome, Tuesday, March 17, 2020. For most people, the new coronavirus causes only mild or moderate symptoms. For some it can cause more severe illness, especially in older adults and people with existing health problems. (AP Photo/Alessandra Tarantino)

கொரொனா பாதிப்பால் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 24 மணி நேரத்தில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதற்கு அடுத்தபடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாதிக்கப்பட்டவர்களில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon