விமானத்தில் இருந்து கீழே குதித்த பயணியால் அதிர்ச்சி..!
புறப்பட தயாராக இருந்த விமானத்திலிருந்து கீழே குதித்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. கனடாவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது.
அப்பொழுது ஆண் பயணி ஒருவர் திடீரென்று விமானத்தில் கேபின் கதவை திறந்து வெளியே குதித்தார். அவர் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயம் அடைந்தார். காவலர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விமானத்தில் இருந்து எதற்காக குதித்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் விமானம் ஆறு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





