பொங்கல் பரிசு.. திடீர் சிக்கல்.. ரேஷன் கடையின் இணையதளம் முடக்கம்..!
மதுரை அருகே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகைக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் பொங்கல் பரிசு தொகைக்கு இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் நியாயவிலை கடையில் குவிந்தனர்.
உணவு பொருட்கள் வழங்குவது தொடர்பாக இணையதளம் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுவதால் ரேஷன் கடைகளுக்கு இணையதள சேவை முடங்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்பரங்குன்றம் தொடக்கம் குளம் பகுதிகளில் மூன்று மணி நேரமாக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





