--- --:--:-- --

பைபிள் கற்க சென்ற சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மதபோதகர்..!

11

சென்னையில் பைபிள் கற்க வேதாகம் வகுப்புகளுக்கு சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரண்டு மதபோதகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

அயனாவரத்தில் யுனைடட் இந்தியா நகரில் கிறிஸ்தவ வேத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் மதபோதகராக பயிற்சி பெற்றவர்கள் வேதாகம் பள்ளிகளில் சிறுவர் சிறுமிகளுக்கு பைபிலை வழங்கி வகுப்புகள் நடத்துவது வழக்கம்.

 

இத்தனை ஆண்டுகளாக உறுப்பினராக உள்ள மத போதகர் சாம் ஜெய சங்கர் பல சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமிகளிடம் மதபோதகர்கள் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசியது உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 

மற்றொரு மதபோதகர் மீது இதேபோன்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரை கிறிஸ்தவ அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து இரண்டு மத போதகர்களையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ள கிறிஸ்தவ அமைப்பு அவர்கள் மீதான புகாரை உரிய ஆதாரங்களுடன் போலீசில் ஒப்படைத்து உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள இரண்டு மத போதகர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon