--- --:--:-- --

ஆற்றங்கரையோரம் வீசப்பட்ட நோயாளியின் கால்..! மக்கள் அதிர்ச்சி..!

12

டலூரில் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட நோயாளியின் கால் கெடிலம் ஆற்றங்கரையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

 

அதில் அங்கு கிடந்தது மேல் புவனகிரியை சேர்ந்த கணபதி என்பவரின் கால் என்பது தெரியவந்தது. சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க கடந்த மாதம் அவர் வள்ளி விலாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தீவிரம் காரணமாக கணபதியின் வலதுகாலை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை செய்து அகற்றப்பட்ட கால் முறையாக அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கெடிலம் ஆற்றங்கரையில் அலட்சியமாக வீசி சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

 

இதனையடுத்து வள்ளி மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போலீசார் எச்சரித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக விரைந்து வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த காலை எடுத்து வெறும் ஒரு அடிக்கு மட்டும் பள்ளம் தோண்டி புதைத்து சென்றனர்.

 

ஆற்றின் ஓரம் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கு தடை உள்ளது. ஆனால் வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் மனித உடல் பாகங்கள் பிரச்சனை ஆனதும் அதனை அங்கேயே பள்ளம் தோண்டி புதைத்துள்ளனர்.

 

இதனை ஏற்க மறுக்கும் அந்த பகுதி மக்கள் அதனை மீண்டும் தோண்டி எடுத்து முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் மனித உடல் பாகத்தை ஆற்றங்கரையோரம் வீசி விளாஸ் மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon