கொரொனா கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..!
டெல்லியில் கொரொனா கால் சென்டரில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமிக்கு மற்றொரு கொரொனா நோயாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சத்தார் போரில் பத்தாயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி கழிவறைக்கு சென்றபோது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 15ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






