சக பணியாளருக்கு பாலியல் தொல்லை..! பெண் தற்கொலை முயற்சி!
கோவை அருகே சக பணியாளர் கொடுத்த தொடர் பாலியல் தொல்லை காரணமாக சாணி பவுடரை கரைத்து குடித்து பெண் துப்புரவு பணியாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பேரூராட்சியில் துப்புரவு வாகன ஓட்டுநராக பணிபுரியும் ராஜதுரை என்பவர் பெண் ஊழியர் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
போலீசில் புகார் அளிக்க பயந்து அந்த பெண் வீட்டில் இருந்த சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






