கொரொனாவை குணப்படுத்தும் மருந்து என தான் கூறவில்லை என கூறிய பாபா ராம்தேவ்..!
கொரொனா நோயை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்ததாக கூறவில்லை என பாபாராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனாவை குணமாக்கும் மருந்து என குரோனில் என்ற பெயரில் கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஸ் அமைச்சகம் மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளித்துள்ள பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சரிய பாலகிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த மருந்தை எடுத்துக்கொண்ட கொரொனா நோயாளிகளுக்கு குணம் கிடைத்தது என்று மட்டுமே கூறியதாக குறிப்பிட்டுள்ள அவர் வேண்டுமானால் மீண்டும் கிளினிகல் சோதனைகளை நடத்த தயார் என்றும் பதிலளித்துள்ளார். பதஞ்சலி நிறுவனத்தை அழிக்க சிலர் சதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.






