“உதய சூரியனுக்கு போடுங்க ஓட்டு” செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு
பல்லடம் தொகுதியில் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிக்கும் செல்வராஜ் எம்.எல்.ஏ.
பல்லடம்: தேர்தல் பிரசாரம் நிறைவடைய ஒரு வாரமே உள்ள நிலையில், காலையில் தொடங்கி இரவு வரை அசராமல் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் திமுக வேட்பாளர் செல்வராஜ். அவருக்கு செல்லுமிடங்களில் மக்கள் ஆர்வமுடன் வரவேற்பு தந்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடையே பேசிய வேட்பாளர் செல்வராஜ், “திருப்பூர் மாநகரம் அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி, அதன் அண்டை தொகுதியான பல்லடத்திலும் தொடர வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள், தொழில் பெருக்கம் மற்றும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்,” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

பெண்கள் ஆரத்தி எடுத்தும், இளைஞர்கள் கைதட்டியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். கூட்டத்தின் எழுச்சியைக் கண்ட திமுக நிர்வாகிகள், “பல்லடம் தொகுதியின் பல இடங்களில் மக்கள் அளிட்து வரும் இந்த உற்சாகம், தொகுதியில் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது” எனத் தெம்புடன் தெரிவித்தனர்.
இந்த எழுச்சிமிகு பிரச்சாரத்தில் மாவட்ட, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், செல்வராஜின் தேர்தல் பிரசாரம், பல்லடத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.






