திருவாடானையில் சிறப்பாக நடைபெற்ற பெரிய கோயில் சப்தாவர்ண விழா
திருவாடானையில் பெரிய கோயில் சப்தாவர்ண விழா மிக சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றளவும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழா கடந்த மே 21ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. பத்தாம் நாள் திருவிழாவாக சப்தாவர்ணம் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வானது ஆயிரம் வைசிய மஞ்சள பூத்தார் மகாஜனசபை சார்பில் நூறாவது ஆண்டு வைர கட்டிடத்தில் கொண்டாடினர். இந்த சப்தாபர்ண விழாவில் மாலை பஞ்சமூர்த்திகள் மங்கள நாதஸ்வர மேளக்கச்சேரியுடன் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரம் செய்யபட்டு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
திருவாடானையில் அருள்மிகு சினேகவல்லி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் வைகாசி விசாக விழா சிறப்பாக நடைபெற்றது.10ம் நாள் நிகழ்வாக ஆயிரம் வைசிய மஞ்சள பூத்தார் மகாஜனசபை சார்பில் சப்தாவர்ணம் கொண்டாடப்பட்டது. சப்தாபர்ண விழாவில் பஞ்சமூர்த்திகள் மண்டபத்தில் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுற்றுவட்டார மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.






