--- --:--:-- --

போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் விஜய் ஆய்வு..!

10

முதல்வர் விஜய் நந்தனம் மெட்ரோ தலைமையகத்தில் ஆய்வை முடித்த பின்னர், ரயிலில் பயணித்து கத்திப்பாரா வந்தார். அங்கு ஆய்வு மேற்கொண்டிருந்தப் போது, அங்கு குழுமியிருந்த பொது மக்களின் சத்தத்தால் கத்திபாரா பகுதியே அதிர்ந்தது. தமிழக முதல்வர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு காரில் வந்தார்.

 

 

அவரை மெட்ரோ அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின்னர், அங்கிருந்து மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் விஜய் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கும் அவர், அங்குள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார்.

 

 

அடுத்து, கிண்டி கத்திப்பாரா செல்லும் அவர், அங்கு நடைபெறும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, போரூர் – பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரெயில் ஓட்டத்தையும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து வருகிறார்.

Leave a Reply

Right Menu Icon