--- --:--:-- --

நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணை

7

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக, 13 பேருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

 

மோசடி, சதித்திட்டம், நம்பிக்கை துரோகம் மற்றும் சான்றுகளை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இக்குற்றப்பத்திரிகையுடன் மொத்தம் 360 சாட்சிகள், 422 முக்கிய ஆவணங்கள் மற்றும் 43 ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

 

 

வினாத்தாள் கசிந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், கைதான 13 பேருக்கு எதிரான இந்த குற்றப்பத்திரிகை மீது சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) விசாரணை நடைபெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon