--- --:--:-- --

மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி – அமைச்சர் ராஜ்மோகன்

02

ரசு பள்ளி மாணவா்களுக்கான சத்துணவில் முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிாியாணி வழங்க முதலமைச்சரிடம் பாிந்துரை செய்திருக்கிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத்தில் இயங்கி வரும் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் பல்வேறு கோரிக்கைகளையும் கருத்துகளையும் நேரில் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், “மாநில முதல்வரின் உரிய அனுமதியைப் பெற்று, ஆசிரியர்களின் நியாயமான அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நான் முழு மூச்சாக மேற்கொள்வேன்” என்று உறுதியளித்தார்.

 

 

தொடர்ந்து பேசிய அவர், “ஆசிரியர் சங்கங்களால் அளிக்கப்படும் பல்வேறு மனுக்கள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தையும் வெறும் காகித வடிவில் மட்டும் வைத்திருக்காமல், பிரத்யேகமான ஒரு மொபைல் செயலி மூலம் பதிவு செய்யும் நவீன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் பதிவு செய்யப்படும் மனுக்கள், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தானாகவே வகைப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், எந்தவொரு மனுவின் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியும் என்றும், மனுக்கள் எவ்விதத்திலும் விடுபட்டுப்போக வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

 

பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 85 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி இருக்கும்போது தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி, ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி தமிழ் தாய் வாழ்த்து முதன்மை படுத்துகிறோம்.” என்றார்.

 

மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டுவந்தார். அதை சத்துணவு திட்டமாக எம்.ஜி.ஆர் மாற்றினார். கலைஞர் அதில் முட்டையை சேர்த்தார். அந்தவகையில் தவெக அரசு பிரியாணி வழங்கலாம் என்ற பரிசீலனை செய்து வருகிறது. இது குறித்து முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளோம். அதன்படி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்கலாம் என்பது என்னுடைய எண்ணம். இருப்பினும் முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் குறைக்கவில்லை என்றால் கட்டண நிர்ணயக் குழு மறு கட்டமைப்பு செய்யப்படும் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Right Menu Icon