--- --:--:-- --

பீகார் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்..!

10

பீகார் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி சாம்ப்ரா மற்றும் கிழக்கு, மேற்கு சம்பாரம் மாவட்டங்களில் நடந்த தேர்தல் பொது கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரின் பெயரை குறிப்பிடாமல் இந்த தேர்தலில் இரு இளவரசர்களும் பதவியில் அமர்வதற்கான களத்தில் இறங்கி இருப்பதாக தெரிவித்தார்.

 

அதேநேரம் பீகாரின் வளர்ச்சிக்காக மத்திய, மாநிலம் இரட்டை எஞ்சின் கொண்ட அரசு பாடுபட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். முதல்கட்ட தேர்தல் முடிவடைந்து இருக்கும் நிலையில் முன்பு மீண்டும் நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சியே நீடிக்கும் என்பது தெளிவாக தெரிந்து இருப்பதாக பிரதமர் பேசினார்.

 

சமஸ்திபூரில் பேசிய பிரதமர் பீகாரின் முதல்வராக இருந்தாலும் நிதீஷ் குமார் தனது உறவினர்கள் யாரையும் இதுவரை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கியது இல்லை என்றும் தனது உறவினர்களையும் நாடாளுமன்றத்தில் காண முடியாது என்றும் பிரதமர் பேசினார்.

 

மறுபுறம் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்ரீ யாதவ் நேற்று ஒரே நாளில் 17 பொதுக்கூட்டங்களில் பேசினார். தேஜஸ்வியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் இதற்கு முன் ஒரே நாளில் 16 பொதுக்கூட்டங்களில் பேசியதே சாதனையாக இருந்தது.

Leave a Reply

Right Menu Icon