--- --:--:-- --

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தேவை..!

11

ருத்துவ உயர்சிறப்பு படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில அரசுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியதை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

இதனால் அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு பலன் கிடைக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என கூறியுள்ள ஸ்டாலின் 2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon