--- --:--:-- --

ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் கூறியது என்ன? – லோக் பவன் விளக்கம்

02

மிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்துப் பேசினார். அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் இன்று ஆளுநரையும் நயினார் நாகேந்திரன் சந்தித்தது தமிழக அரசியல் கவனம் பெற்றது.

 

 

இந்த சந்திப்பின் போது சில கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக சொல்லப்பட்டது. ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன் அதனை உறுதிப்படுத்தினார். அதில், அமைச்சர் விஸ்வநாதன் மீதும், அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாதோர் பங்கேற்றது குறித்து நடவடிக்கை எடுக்க மனு அளித்ததாக நயினார் நாகேந்திரன் கூறினார்.

 

 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுசெய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்த அவர், ஆளுநரை கொச்சைப்படுத்தி பேசுவது அமைச்சருக்கு அழகல்ல என்றும் கருத்து கூறினார்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இணைந்து, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.

 

அந்த மனுவில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர இரண்டு தனிநபர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயலாகவும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை கடுமையாக கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாதவாறு உறுதி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குமாறும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாடு மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஒரு பெண் குழந்தையிடம் முறையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. அது குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon