போதை ஆசாமிகளின் அட்டகாசத்தால் சுவர் ஏறி குதிக்கும் மாணவிகள்
வேலூரில் போதை ஆசாமிகளின் தொந்தரவு காரணமாக கல்லூரியின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வகுப்பறைக்கு செல்வதாக மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் ஏராளமான மாணவி மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த அரசு கலைக் கல்லூரியின் அருகே 2 கோடியே 13 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 160 மாணவிகள் தங்கும் வகையில் நல விடுதி கட்டப்பட்டுள்ளது. வண்டி கிடப்பதால் அங்கு அமர்ந்திருக்கும் போதே ஆசாமிகள் அந்த வழியாக செல்லும் கல்லூரி மாணவிகளை கேலி செய்வதாக தெரிகிறது.
இதனால் மாணவிகள் கல்லூரியின் சுற்றுச்சுவரில் ஏறி குதித்து வகுப்பறைக்கு செல்லும் நிலை உள்ளதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.





