அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..!
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
கோவை மலைப்பகுதி நீலகிரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரம் மன்னார் வளைகுடா, குமரி கடலிலும் தெற்கு இலங்கை கடலோரம், தென்மேற்கு அதனை ஒட்டிய தென்கிழக்கு வடக்கு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளிலும் தீவு பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





