--- --:--:-- --

பள்ளி மேலாண்மைக் குழு எஸ்.எம். சி சார்பில் அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில்  கடிதம் எழுதும் போட்டி..!

1

ள்ளி மேலாண்மைக் குழு எஸ்.எம். சி சார்பில் அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில்  கடிதம் எழுதும் போட்டி இந்திய அஞ்சலகத் துறை நடத்தியது.

 

இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 14 ந் தேதி தொடங்கி டிசம்பர் 14 ந் தேதி வரை நடத்தப்படுகிறது.

 

போட்டிக்கான தலைப்பாக “கடிதத்தை எழுதுவதில் உள்ள மகிழ்ச்சி, மற்றும் டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அல்லது ஏதேனும் ஒரு வட்டார மொழியில் அவரவர் கையால் இன்லேன்ட் என்னும் உள்நாட்டு கடிதப் பிரிவில் எழுதி டிசம்பர் 14 க்குள் சமர்ப்பிக்க உத்தரவு இடப்பட்டு உள்ளது.

 

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் ரொக்க பரிசு கொடுக்கப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி) சார்பில் கடிதம் எழுதும் போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

போட்டியை பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளரும், தலைமை ஆசிரியருமான ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடிதப் போட்டியை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் மேற்பார்வையில், திருப்பூர் வடக்கு அஞ்சல் ஆய்வாளர் ரஞ்சித் குமார் முன்னிலையில், திருப்பூர் அஞ்சல் துறை ஆய்வாளர் அலுவலக மேற்பார்வையாளர் அசோக், அனுப்பர்பாளையம் போஸ்ட்மேன் சத்யராஜ் ஆகியோர் நடத்தினர். போட்டியில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவிகள் வரை படிக்கும் பலர் கலந்து கொண்டு ஆர்வமாக எழுதினர்.

Right Menu Icon