--- --:--:-- --

சிறையிலிருந்து 61 இந்தியர்களை விடுவித்து சொந்த செலவில் அனுப்பி வைத்த சவுதி அரேபிய அரசு!

2

அனுமதிச் சீட்டு காலாவதியாகி சிறையிலிருந்த 61 இந்தியர்களை விடுவித்த சவுதி அரேபிய அரசு அவர்களை சொந்த செலவில் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. சவுதி அரேபியாவில் தங்கியிருப்பதற்கான அனுமதிச்சீட்டு காலாவதியானதால் 61 இந்தியர்கள் 3 மாதங்கள் சிறையில் இருந்தனர்.

 

இவர்களை விடுதலை செய்த அந்நாட்டு அரசு பேருந்துகள் மூலம் தம்மாம் நகரில் இருந்து ரியாத் விமான நிலையத்திற்கு அழைத்து வந்து. அங்கிருந்து 61 பேரின் விமான கட்டணமான இந்திய மதிப்பில் முப்பதாயிரம் ரூபாயை சவுதி அரேபிய அரசு ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பியது.

 

அவர்களுக்கு இந்திய தூதரகம் தற்காலிக பாஸ்போர்ட் அளித்தது. இவர்கள் தவிர 139 பேர் விமானத்தில் ஹைதராபாத் வந்து சேர்ந்தனர். அனைவருக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது 200 பேரும் ஹைதராபாத் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon