--- --:--:-- --

சாத்தான்குளம் சம்பவம் : அரசு கட்டுப்பாட்டில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு.. அடுத்து காக்கிகள் கைதா? சிபிசிஐடி விசாரணை “விறுவிறு”!!

ertse

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருவரும் சந்தேக மரணம் என முதல் கட்டமாக வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து 2-வது நாளாக விசாரணையை துரிதப்படுத்தியுள்ளதால், இந்த வழக்கில் மேலும் பல அதிரடி திருப்பங்களும், இருவரின் உயிரிழப்புக்கு காரணமாக காக்கிகளின் கைது நடவடிக்கைகளும் கொள்ளப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 


சிறைக் கொட்டடி கொடூர மரணம்

 “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் செல்போன் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரின் சித்ரவதையால் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பெரும் போராட்டங்களும், கண்டனக் குரல்களும் எழுந்தன. இருவரின் சிறைக் கொட்டடி கொடூர மரணம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கண்டனத்துக்கும் ஆளாகியுள்ளது”


 

இதனால் இருவரின் உயிரிழப்புக்கு காரணமான கொடூர காக்கிகளை காப்பாற்றும் முயற்சி மற்றும் இருவரின் மரணத்தை சாதாரண உயிரிழப்பாக திருப்ப முயற்சித்த காவல்துறை மற்றும் தமிழக அரசின் முயற்சிகள் அம்போவானது. கடைசியில் இந்த வழக்கை வதாகக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின் வாங்கியதும் சர்ச்சையானது.

ஆனால், இந்த இருவரின் கஸ்டடி மரணம் தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்ற கிளை தனது கையில் எடுத்தது வழக்சில் பெரும் திருப்பமாகவே அமைந்து விட்டது.தாமாக முன் வந்து தமது மேற்பார்வையில் வழக்கு விசாரணையை மேற் கொண்டது. உயர் நீதிமன்ற கிளை நீதியரசர்கள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அமர்வு அடுத்தடுத்து சுழற்றிய சாட்டையால் காக்கிகளின் அட்டூழியங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

 

இதிலும் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலில் சாத்தான்குளம் மரணம் தொடர்பாக நேரில் விசரணை நடத்தச் சென்ற தூத்துக்குடி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன், காவல் துறையினரால் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் மற்றும் சாதாரண கான்ஸ்டபிளான மகாராஜன் என்பவனின் அடாவடித்தனமான உன்னால ஒண்ணும் பிடுங்க முடியாது என்ற மி.ரட்டல் நீதித்துறையையே உஷ்ணமாக்கி விட்டது.

 

இதனால் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் அறிக்கை மற்றும் ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரது போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்படி, மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். தமிழக அரசு பரிந்துரைத்த சிபிஐ விசாரணையை தொடர தாமதமாகும் என்பதால் இந்த வழக்கில் ஒரு நிமிடம் கூட தாமதம் கூடாது . கொலை வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரணையை உடனடியாக தொடர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனவே உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உடனடியாக சிபிசிஐடி போலீசார் டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் நேற்றே விசாரணையை கொண்டனர். தொடர்ந்து முதற்கட்டமாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது அரசு கட்டுப்பாட்டிலிருந்த நிலையில் இருவரின் மரணம் சந்தேக மரணம் என சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

மேலும் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார், டிஎஸ்பி அனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரின் மரணம் தொடர்பாக சம்பவம் தொடர்பான அனைத்து இடங்களுக்கும் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் இன்றும் மீண்டும் விசாரணையை நடத்தி வருகிறார். மேலும், முழுக்க, முழுக்க வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2-வது நாளாக தடய அறிவியல் துறை நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்தும் வருகின்றனர்.

 

“சாத்தான் குளம் சம்பவத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கையில் எடுத்து சாட்டையைச் சுழற்றிய நிலையில், சிபிசிஐடி விசாரணை விறுவிறுப்படைந்துள்ளது. முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து கொடூர சித்ரவதையில் ஈடுபட்ட காக்கிகள் மீதும் விரைவில் கைது நடவடிக்கை எந்நேரமும் பாயும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது!”

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon