--- --:--:-- --

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை : சிபிஐ இடைக்கால விசாரணை நிலை அறிக்கை நாளை தாக்கல்

1

சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை வழக்கில் இடைக்கால விசாரணை நிலை அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. காவல்துறை விசாரணையின்போது ஜெயராஜ் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதுவரை 8 காவலர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிஐ உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்கள், சாட்சியமளித்த பெண் காவலர் ரேவதி, தலைமை எழுத்தாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. 8 சிபிஐ அதிகாரிகளில் ஐந்து பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.

 

இந்த வழக்கில் இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் நாளை இடைக்கால அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. இதேபோல் சிபிசிஐடி தரப்பில் முழு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Right Menu Icon