--- --:--:-- --

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிரம்மாண்ட கோவில் திறப்பு..!

7

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தலுக்காக நாடகமாடுகிறார் என்றும் அந்த நாடகம் மக்களிடத்தில் எடுபடாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது.

 

சுமார் 78 அடி கொண்ட வெண்கல சிலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மூலம் அம்மா பேரவை சார்பாக கட்டப்பட்டுள்ள கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

 

இந்த கோவில் திறப்பு விழாவில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்கள் மனங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனவும் கூறினார்.

 

மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தலுக்காக நாடகமாடுகிறார் என்றும் அந்த நாடகம் மக்களிடத்தில் எடுபடாது என்றும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon