--- --:--:-- --

திருவாடானை அருகே நடந்த புனித செபஸ்தியார் ஆலய சப்பர பவனி..!

8

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை-மேலவயல் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய உள்ளது. இந்த ஆலய திருவிழா மே 26ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வோர் நாளும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, நவநாள் நிகழ்வு நடந்தது. திரு பலியினை பங்குதந்தைகள்  நடத்தினர்.

திருவிழாவில் சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து முதலில் புனித செபஸ்தியார்  ஒரு சப்பரத்தில் வைத்து அதனை இறைமக்கள் சுமந்து பவனி வந்தனர்.

இந்த தேர் பவனியின் போது  வான வேடிக்கை நடைபெற்றது.  இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறைமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon