மாட்டுக்கு ரூ.5,000 அபராதம்.. ஊழியருக்கு சரமாரியாக விழுந்து அடி..!
சாலையில் சுற்றித்திரிந்த மாட்டை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர் மீது மாட்டின் உரிமையாளர் தாக்குதல் நடத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் பணியாற்றி வரும் மாநகராட்சி ஊழியர் கன்னியப்பன் சக ஊழியர்களுடன் நெற்குன்றம் பகுதியில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது ஊழியர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவுடன் செல்போனை பிடுங்கி தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரத்துடன் ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மாட்டிற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் பிடித்த ஆத்திரத்தில் அவர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.





