குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 – தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்
தமிழ்நாடு காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னையில் வெளியிட்டார்.
அதில், குடும்ப அட்டைக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றும், காலியான 3 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 2030-க்குள் நாய்களுக்கு 100% தடுப்பூசி & கருத்தடை மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





