சிறந்த 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை
2023 – 24-ம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா விருது, அந்த பள்ளிகளுக்கு தலா ₹10 லட்சம் ஊக்கத் தொகை வரும் 6-ம் தேதி வழங்கப்படவுள்ளன.
பள்ளி கட்டமைப்பு, கல்விச் செயல்பாடுகள், தலைமை ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ₹10 லட்சத்தை சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்காக செலவு செய்யலாம் என அரசு கூறியுள்ளது.





