ரியோவின் ஜோ படத்திற்கு குவியும் பாராட்டுகள்..!
நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கத்தில் உருவான ஜோ திரைப்படம் கடந்த 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இப்படத்தில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதா பாய் எனப் பலரும் நடித்து உள்ளனர்.இந்நிலையில், கடந்த 5 நாட்களில் ஜோ திரைப்படம் உலக அளவில் ரூ. 4 – 5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.





