எஸ்ஆர் நிறுவன பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பழுது..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எஸ்ஆர் நிறுவன பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்கள் பழுதானதால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே அமைந்துள்ள அந்த பெட்ரோல் பங்கில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் பிடித்துள்ளனர். சிறிது தூரம் சென்றதும் வாகனங்கள் பழுதாகி நின்ற தாக கூறப்படும் நிலையில் அவர்கள் பெற்றோர் பங்கு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
பெட்ரோலை பாட்டிலில் பிடித்து பார்த்தபோது அதில் வேறு வகை திரவம் கலந்து இருந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் தவறுதலாக பெட்ரோலில் எத்தனால் அதிகளவில் கலந்து விட்டதாகவும் பழுதான வாகனங்களை சரி செய்து கொடுத்து விடுவதாகவும் கூறினார்.






