--- --:--:-- --

சிறைத் தண்டனை முடிந்து இளவரசி இன்று விடுதலையானார்..!

11

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலாவின் உறவினர் இளவரசி இன்று விடுதலையானார். அபராதத் தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாததால் சுதாகரனின் விடுதலை தாமத மாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை முடிந்த நிலையில் கொரொனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார்.

 

சிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர் பெங்களூரில்உள்ள தனியார் பண்ணை பங்களாவில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். சசிகலாவின் உறவினரான இளவரசிக்கும் தண்டனை காலம் முடிந்ததையடுத்து அவர் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

விடுதலைக்கு பிறகு இளவரசி சசிகலா தங்கியுள்ள பண்ணை வீட்டிற்கு சென்றார். சிறையிலுள்ள சுதாகரனின் தண்டனை காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் அவரது தொகையான 10 கோடி ரூபாய் எண்ணமும் செலுத்தப்படாத காரணத்தால் அவரது விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon